நீர்கொழும்பில் 'சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' போட்டி

சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப்' போட்டியை நடாத்துவதற்காக இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்துடன் மீண்டும் ஒருமுறைகை கோர்த்துள்ளது. 'சன்குயிக் தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகள்' நீர்கொழும்பு பொது கடற்கரைப் பூங்காவில் டிசம்பர் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகள் -ஆண் மற்றும் பெண் குழுக்களில் திறந்த அடிப்படையிலான, 20 வயதுக்கு கீழ்ப்பட்ட மற்றும் 25 வயதுக்குகீழ்ப்பட்டபோட்டிகள் என 3 பிரிவுகளின் கீழ் நடைபெறவிருக்கின்றன.

பலவருடங்களாக இலங்கையின் தேசிய விளையாட்டுக்கு ஆதரவளிக்கும் ஒருவர்த்தகக் குறியீடாக திகழும் சன்குயிக் ஆனது,கடந்தவருடம் முதல் 'தேசிய கடற்கரை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டியை' நடாத்தி வருகின்ற அதேநேரத்தில்,'வர்த்தக நிறுவனங்கள் கரப்பந்தாட்ட சம்பயின்ஷிப் போட்டிக்கு' 2012ஆம் ஆண்டிலிருந்து ஒரு அனுசரணையாளராக செயற்பட்டுவருகின்றது.

இப்போட்டிகளின் வெற்றியாளர்களுக்குசன்குயிக் இன் வெகுமதியாககவர்ச்சிகரமானபணப் பரிசுகள் வழங்கப்படும்.

'சன்குயிக் தேசியகடற்கரைகரப்பந்தாட்டசம்பியன்ஷிப் போட்டிகள் 'நடைபெறுகின்ற சமகாலத்தில்,ஒருநாள் மாலைநேரத்தில் கடற்கரையோர கொண்டாட்ட நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது.

கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் இணைந்துகொள்கின்றஒவ்வொருவரும் அனுபவித்துமகிழும் பொருட்டு, இக் கொண்டாட்டநிகழ்வில் பல்வேறுகளிப்பூட்டல் செயற்பாடுகள், இசை மற்றும் வேடிக்கை விளையாட்டுக்கள் உள்ளடங்கியிருக்கும். குடும்பத்திற்குந ட்புறவான ஒருபானமாகவர்த்தகக் குறியீடு இடப்பட்டுள்ள சன்குயிக் அசல் பழத்தின் இயற்கையான நற்குணங்கள் மற்றும் சுவையை வழங்குகின்றது.

டென்மார்க்கை தளமாகக் கொண்டிங்கும் பல்தேசிய வர்த்தகக் குறியீடாக திகழும் சன்குயிக்,உலகெங்கும் உள்ள 100 இற்கும் அதிகமானநாடுகளில் வாழ்கின்றமில்லியன் கணக்கானமக்களால் அருந்தப்படுகின்றது.

சீ.டபள்யூ.மெக்கி பி.எல்.சி. நிறுவனத்தின் ஒருபிரிவான ஸ்கேன் புரொடக்ஸ் இலங்கையில் சன்குயிக் உற்பத்தியை விநியோகம் செய்கின்றது.

அத்துடன்,சாறுபிழியப்பட்ட (ஸ்குவாஷ்) மற்றும் பழச் சுவையூட்டப்பட்ட (கோர்டியல்) பானவகைகளின் சந்தையில் சன்குயிக் உற்பத்தியே முன்னணி வகிக்கின்றது. அந்தவகையில் 68 சதவீதம் சந்தைப் பங்கை இது கொண்டுள்ளது.

சன்குயிக் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சௌகரியத்தை வழங்கும் நோக்கில்,புதிய'டெட்ராபெக்' ரக உற்பத்தியை அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

சன்குயிக் உற்பத்திவகைகளில் மிகவும் பிரபல்யமானஆரஞ்சுபழச் சுவைமற்றும் பழக் கலவைச் சுவையைக் கொண்ட இவ்வுற்பத்தியானது,

200 மில்லிலீற்றர் மற்றும் 125 மில்லி லீற்றர் என இரு கொள்ளவுகளில் சந்தைக்குவந்துள்ளது.

ஹொரண பிரதேசத்தில் அமைந்துள்ள மிகவும் முன்னேற்றகரமான தொழில் நுட்பவசதியைத் தன்னகத்தே கொண்ட,ஐரோப்பிய தர நியமத்தின் அடிப்படையிலான உற்பத்தித் தொழிற்சாலையில் சன்குயிக் உற்பத்திகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பரீத் ஏ றகுமான்

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை