சூரியனை கடந்து சென்ற புதனின் காட்சி வெளியீடு

புதன் கிரகம் சூரியனைக் கடந்து செல்லும் அரிய காட்சியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது.

சூரியனை நேர்கோட்டில் கடக்கும்போது சிறிய அளவிலான கறும்புள்ளி போல புதன் கிரகம் காட்சி அளித்தது. இந்த அரிய நிகழ்வு ஒரு நூற்றாண்டில் 13 முறை மட்டுமே நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும்போது, புதனின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த நிகழ்வு கறும்புள்ளியாக மட்டுமே காட்சி அளித்தது.

கடந்த 1999, 2003, 2006, 2016 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அரிய நிகழ்வு திங்களன்று நடைபெற்றது. அடுத்த நிகழ்வு வரும் 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதியே காணமுடியும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை