கிரிக்கெட் அணிக்கான சீருடை அறிமுகம்

ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 13 வயதின் கீழ் கிரிக்கெட் அணிக்கான சீருடை அறிமுக நிகழ்வு பாடசாலை அதிபர்எம். எம். ரிஸான் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் (05) நடைபெற்றது.

இதன் போது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சிஹான் சிங்கவன்ஸ சீருடையினை அதிபரிடம் கையளித்ததோடு அதிபர் 13 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் தலைவர் மொஹமட் நஸ்வானிடம் கையளித்தார். இந்தநிகழ்வில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் உட்பட பெரும்திரளானோர் கலந்து கொண்டனர். நீண்டகால இடைவெளிக்கு பிறகு இம் முறை கல்வி அமைச்சினால் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியபாடசாலைக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதினால் கைவிடப்பட்டிருந்த ஸாஹிரா தேசிய பாடசாலையின் கிரிக்கெட் விளையாட்டு தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டு இம் முறை பாடசாலை மட்டத்திலான 13 வயதின் கீழ் கிரிக்கெட் தொடரிலும் மாணவர்கள் பங்கு பற்றவுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை