அமெரிக்க – தென் கொரிய கூட்டு இராணுவ ஒத்திகை ஒத்திவைப்பு

வட கொரியாவால் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்த கூட்டு இராணுவப் பயிற்சியை ஒத்திவைக்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து, தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பெர் கூறியதாவது:

தென் கொரியாவுடன் நடைபெறும் வருடாந்த கூட்டு இராணுவப் பயிற்சியை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம். நல்லெண்ண நடவடிக்கையாகவும், தூதரக ரீதியில் சுமூகமான சூழலை உருவாக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

முன்னதாக, அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொண்டால், அது கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக்குவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை பாதிக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை