தேர்தலில் எதிர்பார்த்த முடிவு எமக்கு கிடைக்கவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் நாம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்காதபோதும் மக்கள் ஆணையை ஏற்றுக்கொள்கின்றோம்.

இது மக்களால் பரிமாற்றப்பட்ட ஆணையாகும். எமது தவறுகளை நெறிப்படுத்திக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்போம் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

எங்களுக்கு ஒரு இலட்சிய இலக்கு இருந்தது. ஆனால் இரண்டு

முக்கிய முகாம்கள் இருக்கும்போது ஜனாதிபதி பிரசாரத்தை நடத்துவது கடினம். அதை அறிந்தே நாங்கள் எமது பிரசாரத்தை நடத்தினோம். ஆனால், இதைவிட ஒரு சிறந்த பெறுபேற்றை நாங்கள் எதிர்பார்த்தோம். தேர்தல் முடிவுகள் நாங்கள் எதிர்பார்த்த முடிவு அல்ல.

புதிய விடயங்களை உள்வாங்கவும் தவறுதலாகவுள்ள விடயங்களை அகற்றி முன்னோக்கி பயணிக்க அனைவரையும் அழைக்கிறோம். இது மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் இடம்பெற்ற மக்கள் ஆணை பரிமாற்றம். ஒவ்வொரு அரசியல் இயக்கமும் அதற்கு உடன்பட வேண்டும். இந்த ஆணையை நாம் ஏற்க வேண்டும். நாங்கள் அந்தக் கட்டத்திலிருந்து எமது பணியை செய்வோம் என்றார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை