தமிழ் மக்களது பிரச்சினையை பேச மறுக்கும் கட்சிகளுக்கு வாக்கு கோரும் உரிமை இல்லை

தமிழ் மக்களது கோரிக்கைகள் தொடர்பாக பேசவோ அல்லது ஒரு உடன்பாட்டிற்கு வரவோ மறுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு எமது மக்களைக் கோருவதற்கு எமக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்) தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நிலைப்பாடு குறித்து வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இதுவரை காலமும் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதாக

வாக்குறுதியளித்து ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் தென்னிலங்கை ஆளும் வர்க்கங்களைச் சேர்ந்த இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன.

ஆனால், தேர்தலில் வெற்றிபெற்ற கையுடன் தமது வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய இனம் ஏமாற்றப்பட்டதே இந் நாட்டின் வரலாறு. தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டதிலிருந்து தற்பொழுது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் வரை தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் ஐக்கியப்பட்டு தமது உள்ளக்கிடக்கையை ஜனநாயக வழியில் வலியுறுத்தி வந்தனர்.

வவுனியா விசேட நிருபர்

Wed, 11/06/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக