காட்டுத் தீப் புகையால் சூழ்ந்த சிட்னி நகர்

அவுஸ்திரேலியாவின் காட்டுத் தீயால் சிட்னி நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது.

வலுவான காற்று வீசுவதால் கடந்த திங்கள் இரவிலிருந்து சிட்னி நகரம் புகையால் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது அங்கு காற்றின் தரம் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிட்னியின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது. காற்றுத் தூய்மைக்கேடு தொடர்பாக சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.

சிட்னி நகரில் சுமார் 5 மில்லியன் பேர் வசித்துவருகின்றனர். அங்கு காற்றுத் தூய்மைக்கேடு இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்றும் அதனால் பொதுமக்கள் வீட்டின் உள்ளேயே இருப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிட்னியைத் தலைநகராகக் கொண்ட நியூசவுத் வேல்ஸ் மாநிலம் கடந்த சில வாரங்களாகக் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை