நிலச்சரிவுகளால் புதையுண்ட கென்ய கிராமங்கள்: பலர் பலி

கென்யாவின் மேற்கு பொகொட் பகுதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் குறைந்தது 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடும் மழை காரணமாக நியர்குலியன் மற்றும் பருவா கிராமங்களே நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமங்கள் வெள்ளம் காரணமாக நாட்டின் ஏனைய பகுதியில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களில் ஏழு சிறுவர்கள் இருப்பதாக மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வீதிகளில் சேறு, மரங்கள் மற்றும் ஏனைய குப்பைகள் சிதறி இருக்கும் புகைப்படங்கள் சமூகதளங்களில் வெளியாகியுள்ளன.

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் அண்மைய வாரங்களில் கடும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக எத்தியோப்பியா மற்றும் தன்சானிய நாடுகளிலும் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. சோமாலியாவில் வெள்ளம் காரணமாக நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை