முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் களவாடும் கும்பல் கைது

உதிரிப்பாகங்களாக்கும் வேலைத்தளம் சுற்றிவளைப்பு

17 முச்சக்கர வண்டிகளுடன் 8 பேர் கைது

முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை திருடி உதிரிப்பாகங்களை பிரித்தெடுத்து விற்பனை செய்யும் வேலைத் தளமொன்றை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். இங்கிருந்த எட்டுப் பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்

ருவன் குணசேகர தெரிவித்தார். களவாடப்பட்ட 17 முச்சக்கர வண்டிகள், 4 மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்கள், உதிரிப்பாகங்களாக பிரிக்கப்பட்ட 05 முச்சக்கர வண்டிகள், முச்சக்கர வண்டிகளின் 4 என்ஜின்கள், 12 இலக்கத் தகடுகள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் 17, 19, 20, 27, 29, 32, 51, 58 வயதுடைய 8 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் மிக நீண்டகாலமாக முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் களவாடப்படுவதாகவும் இவை மிகவும் சூட்சுமமான முறையில் வேலைத் தளத்துக்கு கொண்டு சென்று உதிரிபாகங்களாக பிரித்தெடுத்து விற்பனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். கடந்த 12ஆம் திகதி அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத சந்தேகத்துக்கிடமான முச்சக்கர வண்டியொன்றுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போதே இந்த வேலைத் தளம் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்படி பொலிஸார் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். சந்தேக நபர்கள் 8 பேரும் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 19ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை