ஐ.தே.கட்சி பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா

மக்களுக்கான சேவை தொடரும்  சஜித் பிரேமதாச அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளையடுத்து தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் எனினும், மக்களுக்கு ஆற்றவேண்டிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்கால அரசியல் தொடர்பில் தமக்கு நெருக்கமானவர்களுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

அமைதியான வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாட்டு மக்களுக்கும் சஜித் பிரேமதாச நன்றி தெரிவித்துள்ளார்.

தமது 26 வருட அரசியல் வாழ்க்கையில் தம்முடன் இணைந்து செயற்பட்ட மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் முடிவையடுத்து தான் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்ததாகவும்.எவ்வாறாயினும், இதுவரை காலமும் மக்களுக்கு ஆற்றிய சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(ஸ)

 

 

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை