கரம் போட்டித்தொடர்; பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் சாதனை

அகில இலங்கை பாடசாலைக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளின் இருபது வயதுக்கு கீழ்ப்பட்டோருக்கான 'கரம் ' போட்டித்தொடரில் பசறை தமிழ் தேசிய கல்லூரி மாணவர்கள் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை வரவேற்று பாராட்டும் நிகழ்வு (27/11/2019) கல்லூரி அதிபர் சித்தார்த்தன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், பசறை பிரதேசசபை உறுப்பினர்கள் வேலு ரவி, கார்தீஷ்வரன் ஆகியோரும் பதுளை மாவட்ட கிரிக்கெட் சபையின் செயலாளர் பகி பாலசந்திரன், பசறை கல்வி வலய விளையாட்டு துறை ஆசிரிய ஆலோசகர் வத்ட்ஷலா உபுல்மாலி ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அத்தோடு

பசறை நகரிலிருந்து பசறை தமிழ் தேசிய கல்லூரி வரை வாகனப் பேரணியில் வெற்றியீட்டிய மாணவர்களான கே.பிரவீன், கே.வினோஜன், கே.கோபிஷான், எஸ்.அருண்தேவன், எஸ். சஞ்சய்காந்த், ஆர்.கவிதாசன்

கே.தனுஷன் ஆகியோர் வரவேற்று அழைத்துச்செல்லப்பட்டு கல்லூரியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் எஸ்.எம்.நாசர், டி.கிங்ஸ்டன், எம்.எப்.எம்.இர்ஷாட், எம்.அகல்யா, வீ.விஜயகாந்த் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை