புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்-Shooting Puttalam to Mannar Voters

ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்-Shooting Puttalam to Mannar Voters

வாக்களிப்பை தடுக்கும் நோக்கில் இனவாதிகளினால் பல்வேறு தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்க சென்ற பஸ்கள் மீது துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் இது வரை 69 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்-Shooting Puttalam to Mannar Voters

அத்துடன் தேர்தல் தினமான இன்று மு.ப. 7.00 மணி முதல் மு.ப. 10.00 மணி வரையான காலப் பகுதியில் 49 தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகளில் பொதுஜன பெரமுன கட்சியும், 14 தேர்தல் விதிமீறல் நடவடிக்கைகளில் புதிய ஜனநாயக முன்னணியும், தேசிய மக்கள் சக்தி ஒரு விதிமீறல் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக, தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு செல்லும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல்-Shooting Puttalam to Mannar Voters

Sat, 11/16/2019 - 11:31

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை