கொல்லப்பட்ட பன்றிகளால் கொரியாவில் இரத்த ஆறு

ஆயிரக்கணக்கான பன்றிகள் கொல்லப்பட்டதால் இரு கொரியாவின் எல்லைக்கு அருகில் உள்ள ஆறு ஒன்று இரத்தமாக மாறியுள்ளது.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்காக 47,000 பன்றிகளை தென் கொரிய நிர்வாகம் கொன்று குவித்துள்ளது. இந்த பன்றிகள் புதைக்கப்பட்ட பகுதியில் ஏற்பட்ட கடும் மழையால் அருகில் இருக்கும் இம்ஜின் ஆறு இரத்தமாக ஓடியுள்ளது.

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் விலங்குகளிடம் வேகமாக பரவக்கூடிய, குணப்படுத்த முடியாத நோயாகும். இந்த நோய் தாக்கிய பன்றிகளில் எதுவும் உயிர் தப்புவதில்லை. ஆனால், இந்த நோய் மனிதருக்கு ஆபத்தானதில்லை.

ஆற்றில் கலந்துள்ள இரத்தம் ஏனைய விலங்குகளுக்கு நோய் தொற்று ஏற்பட காரணமாக அமையும் என்று கவலைகள் எழுந்துள்ள நிலையில், இந்தப் பன்றிகள் நோய் தொற்று நீக்கப்பட்ட பின்னர்தான் கொல்லப்பட்டன என்று உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் நதியில் இரத்தம் கலக்காமல் இருக்க அவசர கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Thu, 11/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை