எதிர்க்கட்சித் தலைவர் பதவி சஜித்துக்கு வழங்குமாறு கூறவில்லை

 சம்பந்தன் மறுப்பு

சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டும் என நான் சொல்லவில்லை என இரா சம்பந்தன் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சஜித்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் வழங்கவேண்டும் என இரா சம்பந்தன் கோரியதாக பத்திரிகையொன்றில் முன்பக்க தலைப்பு செய்தி வெளியிடப்பட்டிருந்து. இந்தச் செய்தி குறித்து அவரிடம் வினவியபோது அப்படி ஒன்றும் நான் சொல்லவில்லை என மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் இது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை எனவும் குறித்த செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவித்துள்ள நிலையில் மேலும் குறித்த செய்தி தொடர்பில் உரிய நேரத்தில் பதிலளிக்க உள்ளதாகவும் இரா. சம்பந்தன் மேலும் கூறினார் .

 

ரொட்டவெவ குறூப் நிருபர்

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை