அரசியல் அனுபவம் உள்ளவரே ஜனாதிபதி வேட்பாளர் சஜித்

ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, அமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். ஆனால் அடுத்த வேட்பாளர் கோட்டாபயவுக்கு அரசியல் ரீதியான என்ன தகுதி இருக்கிறது என கேட்டால் ஒன்றுமே இல்லை. சாதாரணமாக பிரதேச சபை உறுப்பினராக கூட இருந்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.இம்ரான் தெரிவித்தார்.

கிண்ணியா வெள்ளமணல் பிரதேசத்தில் ஞாயிற்றுக் கிழமை (10) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சஜித் பிரேமதாச ஒரு அரசியல் அனுபவமிக்கவரும், நல்லதொரு அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவரும். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என சேவைகளை காட்டி இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார்.

இன்று கோட்டாபயவுக்கு இந்த நாட்டில் எத்தனை வழக்குகள் இருக்கிறது. எத்தனை கொலை குற்றச்சாட்டுக்கள் எத்தனையோ ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் இருக்கிறன.

இன்று இனங்களுக்கிடையில் முறுகலைஏற்படுத்துகின்றவர்கள், யுத்தத்தை நிறுத்தி விட்டோம் என்கிறார்கள் இவ்வாறு தான் வாக்கு கேட்கிறார்கள். எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. அவர் வெற்றி பெற்றால் இந்த மாவட்டத்திலும் மட்டும்மன்றி, இந்த நாட்டிலும் ஒற்றுமையும், ஐக்கியத்தையும் ஏற்படுத்துவது உறுதியானது என்றார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை