தெற்காசிய விளையாட்டு விழா:இலங்கை கரப்பந்தாட்ட அணி நேபாளம் பயணம்

தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை ஆண்கள் மற்றும் பெண்கள் கரப்பந்தாட்ட அணிகள் கடந்த 25ம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றன.

இவ்வினையாட்டு விழாவில் கரப்பந்தாட்டப் போட்டிகள் 27ம் திகதி தொடக்கம் டிசம்பர் 03ம் திகதி வரை நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடைபெறவுள்ளது.

இவ்விளையாட்டு விழாவில் பங்குபற்றும் இலங்கை பெண்கள் அணிக்கு அஷானி சமோதிகாவும், ஆண்கள் அணிக்கு தீப்தி ரொமேசும் தலைமை தாங்குகின்றனர்.

ஆறு நாடுகள் பங்குபற்றும் இப்போட்டியில் இலங்கை பி குழுவில் போட்டியிடுவதோடு பி குழுவில் பாகிஸ்தானும், மாலைதீவும் அடங்குகின்றன. பெண்கள் அணியும் பி குழுவில் போட்டியிடுவதோடு பி குழுவில் பாகிஸ்தானும் மாலைதீவும் அடங்குகின்றன. ஆண்கள் அணியின் பயிற்சியாளராக கியூப நாட்டவரான மெனுவல் தொரோசும், உதவி பயிற்சியாளராக சமன் சந்திரநாத்தும் உடற்பயிற்சியாளராக சுசிறி மங்கலவும், அணி முகாமையாளராக கே. ஆர். டீ. சி. ரத்னமுதலி ஆகியோர் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் அணியின் பிரதான பயிற்சியாளராக கியுப நாட்டவரான ரெபேடோ செபெரேவும் உதவி பயிற்சியாளராக ஜாகன இந்திரஜித்தும், உடற்பயிற்சியாளராக சந்தன விஜேசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

Thu, 11/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை