லெபனான் வீதிகளை முடக்கிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்

லெபனானில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வீதிகளை முடக்கி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்ஸ்ஆப் அழைப்புகளுக்கு அரசு வரி நிர்ணயிக்க முடிவு செய்ததை அடுத்தே லெபனானில் கடந்த ஒக்டோபர் 17 தொடக்கம் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் நீடித்து வருகின்றன. அர்ப்பாட்டங்கள் காரணமாக பிரதமர் சாத் ஹரிரி கடந்த வாரம் பதவி விலகினார். புதிய அரசு ஒன்றை அமைப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பெய்ரூட்டின் வடக்கு மற்றும் தெற்கின் பிரதான நெடுஞ்சாலைகளை முடக்கியதோடு வடக்கு நகரான டிரிபோலியிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் தடங்கலை ஏற்படுத்தினர்.

“அரசாங்கத்தினதும் அதன் எந்த ஒரு பாகத்தையும் நம்பமுடியாத நிலையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தொடர்வார்கள்” என்று பெய்ரூட்டின் ரிங் பாலத்தை முடக்கி இருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரான ஹாஷிம் அத்னான் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மூன்றாவது நாளாகவும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த வங்கிகள் இரண்டு வாரங்களின் பின் கடந்த வெள்ளிக்கிழமையே திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1975–90 சிவில் யுத்தத்திற்கு பின் லெபனான் மோசமான பொருளாதார நெருக்கடி ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளது. அதன் பொருளாதார வளர்ச்சி பூஜ்ய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரும் கடன் சுமை கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் லெபனான் உள்ளது.

பதவி விலகியபோதும் அடுத்த அரசு நியமிக்கப்படும் வரை காபந்து அரசு ஒன்றுக்கு தலைவராக ஹரிரி செயற்பட்டு வருகிறார். லெபனானின் அரசியலமைப்பின்படி அந்நாட்டு பிரதமராக சுன்னி முஸ்லிம் ஒருவரே வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை