கிழக்கு ஜெர்மனி நகரொன்றில் ‘நாஜி அவசரநிலை’ பிரகடனம்

ஜெர்மனியின் கிழக்கு நகர் ஒன்றில் தீவிர வலதுசாரிகளின் பிரச்சினை முற்றியிருக்கும் நிலையில் அங்கு ‘நாஜி அவசரநிலை’ ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சக்சோன் தலைநகரான ட்ரெஸ்டன் தீவிர வலதுசாரிகளின் கோட்டையாக பார்க்கப்படுவதோடு இங்கேயே இஸ்லாமிய எதிர்ப்பு பகிடா அமைப்பும் உருவானது.

2025 ஐரோப்பிய கலாசாரத் தலைநகர போட்டியில் உள்ள இந்த நகர், இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கையை எடுப்பதற்காக தீர்மானம் ஒன்றை நகர சபை மூலம் நிறைவேற்றியுள்ளது.

இங்கு நாஜிப் பிரச்சினை இருப்பதாக அந்த நகர சபை உறுப்பினர் மக்ஸ் அஸ்சென்பச் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு யுத்தத்தால் இடம்பெயரும் ஒரு மில்லியன் அகதிகள் மற்றும் குடியேறிகளை ஏற்பதற்கு ஜெர்மன் சான்சலர் அன்ஜெலா மேர்கல் 2015 இல் எடுத்த முடிவு அந்நாட்டில் பெகிடா மற்றும் ஏ.எப்.டி போன்ற தீவிர வலதுசாரி அமைப்புகள் பிரபலம் அடைய காரணமாகியுள்ளது. இந்நிலையில் கிழக்கு ஜெர்மனி மாநிலமான துருங்கியாவில் கடந்த மாதம் நடைபெற்ற உள்ளூர் தேர்தலில் ஏ.எப்.டி கட்சி இரண்டாவது இடத்தை பெற்றது.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை