எகிப்தில் விலங்கு ‘மம்மி’ கண்காட்சி

பண்டைய எகிப்தின் பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் உடல்கள் முதல் முறை பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கெய்ரோவின் தெற்காக சக்காராவின் படி பிரமிட்டுக்கு அருகில் இந்த தொல்பொருட்கள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. இதன்போது முகமூடிகள், சிலைகள் மற்றும் பூனை, முதலை, பாம்புகள் மற்றும் பறவைகளின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் சக்காரா நகரின் பண்டைய அடக்கஸ்தல பகுதியில் இந்த கலைப்பொக்கிசங்கள் கைண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் இரு சிங்கக் குட்டிகளின் மம்மிக்கள் இருப்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டதாக எகிப்து தொல்பொருள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பூனைகளின் மம்மிகள் பரவலாக கண்டுபிடிக்கப்பட்டபோதும் சிங்கங்களின் பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக அரிதானதாகும்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் எகிப்து நிர்வாகம் அண்மைக் காலத்தில் பண்டைய எகிப்து கண்டுபிடிப்புகள் குறித்து அதிக பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை