ஜனாதிபதி கோட்டாவுக்கு ஜப்பான் பிரதமர் வாழ்த்து

நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்-ஷவுக்கு ஜப்பானிய பிரதமர் அபே சின்சோ வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தலில் கோட்டாபய ராஜபக்-ஷவுக்கு கிடைத்துள்ள அமோக வெற்றியை பாராட்டியுள்ள அவர் நேற்று இடம்பெற்ற அவரது பதவியேற்புக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய ஜனாதிபதி கோட்டாபயவுடன் இணைந்து செயற்படுவதற்கும் ஜப்பானிய பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியினூடாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

 

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை