பல்கலை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை மூன்றாம் இடம்

ரெட் புல் பல்கலைக்கழக கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் நடப்புச் சம்பியன் இலங்கை அணி 3 ஆவது பிளே ஓப் போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் 9 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்து வெளியேறியது.

டுபாயில் நடைபெற்ற இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஐ.சி.பி.டீ கிரிக்கெட் அணி விளையாடியது. இதில் மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்ற குழுநிலைப் போட்டிகளில் பி குழுவில் முதலிடம் பெற்ற இலங்கை பிளே ஓப் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.

டுபாய், ஐ.சி.சி. அகடமி மைதானத்தில் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை நிடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களை குவித்தது.

இந்நிலையில் சவாலான இலக்கொன்றை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் தடுமாற்றத்தை சந்தித்தது.

எனினும் மத்திய வரிசையில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் வீரர் ஒருமுனையில் அபாரமாகவும் வேகமாகவும் ஓட்டங்களை பெற்று வெற்றிக்காக போராடியபோதும் மறுமுனையில் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. எனினும் தனித்து போராடிய அயன சிறிவர்தன 47 பந்துகளில் 7 பெளண்டரிகள் 4 சிக்ஸர்களுடன் 88 ஓட்டங்களை பெற்றார்.

இந்த போட்டியில் தோல்வியை சந்தித்த இலங்கை இம்முறை பல்கலைக்கழக உலகக் கிண்ண தொடரில் 3ஆம் இடத்தை பிடித்தது.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை