மாநிலத் தேர்தல்களில் டிரம்புக்கு பின்னடைவு

அமெரிக்காவின் மாநிலத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சியனர் வெற்றிகளை பெற்றிருப்பது அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பின் குடியரசுக் கட்சியினர் செல்வாக்குச் செலுத்தும் கென்டக்கி ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் அன்டி பெஷீர் கடும் போட்டிக்குப் பின் வெற்றியீட்டினார்.

இதேநேரம் கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக விர்ஜினிய சட்டமன்றம் ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.

அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது. எனினும் மிசிசிப்பி ஆளுநர் தேர்தலில் நெருங்கிய போட்டிக்குப் பின் குடியரசுக் கட்சியினர் வெற்றியீட்டியுள்ளனர்.

அமெரிக்க மாநில ஆளுநர்கள் மாநில அரசுகளில் நிர்வாகக் கிளைக்கு தலைமை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிட எதிர்பார்த்துள்ளார்.

Thu, 11/07/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை