பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்

பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய சூழல் உருவாக்கப்படும்-Gotabaya Rajapaksa will ensure fearless environment

கோட்டாபய வின் வெற்றிக்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவரும் பயம், அச்சம் இன்றி வாழக்கூடிய, பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயல்படுவார் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியை அடுத்து இன்று (17) ஸ்ரீ.ல.பொ.பெ. கட்சி அலுவலகத்தில் இந்த கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

பல்வேறு தடைகள் மற்றும் நிபந்தனைகளையும் தாங்கிக் கொண்டு நாட்டின் நலனுக்காகவும் கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்காகவும், தங்களை அர்ப்பணித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தாமங எதிர்பார்த்தபடி ஜனாதிபதித் தேர்தலில் மிகவும் பாரிய கிடைத்துள்ளதாகவும், பெற்றுக் கொண்ட வெற்றியை அனைத்து மக்களும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கொண்டாடுமாறும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலத்தில் மிகவும் இருண்ட யுகத்திற்கு தள்ளப்பட்ட இந்த நாட்டை, ஓரிரு நபர்களால் மாத்திரம் கட்ட முடியாது என்றும், நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

Sun, 11/17/2019 - 14:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை