தமிழ், சிங்கள மக்களின் உறவை பலப்படுத்துவதே எம்முன் உள்ள சவால்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறை கொள்ளாது இனவாதம் பேசி தமிழ்-−சிங்கள உறவினை சிதைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் அடிப்படைவாதிகளினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் பேசுவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இந்து, பௌத்த மக்களின் ஒற்றுமைக்காக நான் யாழ். வந்துள்ளேன். அதற்காகவே நான் செயற்பட்டு வருகின்றேன். நான் கடந்த இரு நாட்களாக கிளிநொச்சி,முல்லைத்தீவுக்கும் விஜயம் செய்திருந்தேன்.அங்கு தமிழ் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்தேன்.

இதன்போது அங்கு வாழும் மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறினர்.விவசாயிகள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.

மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கரிசனை காட்டாது பாராளுமன்றத்தில் இனவாதம் பேசுகின்றனர். தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவிற்கு பாதகம் ஏற்படுத்தி வருகின்றனர். பாராளுமன்றத்தில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுத்து முஸ்லிம் மக்கள் சார்பாக செயற்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காது இனவாதத்தை மட்டும் பேசி வருகின்றனர்.

இலங்கையின் எதிர்க் கட்சித்தலைவர் பதவி இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டது.தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை பேசவே அந்த பதவி வழங்கப்பட்டது.

ஆனால் அவர் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் முரண் ஏற்படும் வகையில் இனவாதத்தையே பேசிவருகின்றார்.சிரேஷ்ட அரசியல்வாதியான சம்பந்தன் இது குறித்து சிந்திக்க வேண்டும்.

கிழக்கில் உள்ள தமிழ் மக்கள்

அங்குள்ள முஸ்லிம் அடிப்படைவாதிகளினால் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

 

பருத்தித்துறை விசேட நிருபர்

Tue, 11/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை