ஆழமாகச் சிந்தித்தே சஜித்தை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

 துரைராஜசிங்கம்

கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளைப் போன்று வெறுமனே ஒரு சில குறுகிய நோக்கங்களுக்காக கூடிக் கலைகின்ற ஒரு இயக்கமல்ல தமித் தேசியக் கூட்டமைப்பு.

70 ஆண்டுகால அரசியல் உணர்வும் தெளிவும் கொண்டதனால்தான் தற்போது எதிர்கொள்ளும் ஜனாதிபதித் தேர்தலின் ஆழ அகலங்களை நன்கு சிந்தித்து சஜித் பிரேமதாசவை ஆதரிக்க எமது தமிழ்த் தேசியத்தின் தலைமை முடிவெடுத்தது. இதனை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி துரைராஜசிங்கம் தெரிவித்தார் .

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து மட்டக்களப்பு கல்லடி துளசி மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே இதனை அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே நாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முந்திரிக் கொட்டை போல் முந்திக்கொள்ளவில்லை. சிலர் கேட்கின்றனர் ஒரு வேட்பாளரை தெரிவு செய்வதில் இவர்களுக்கு

என்ன தாமதம் எனக் கேட்டார்கள். இந்த நாட்டினுடைய அரசியலில் உள்ள தாற்பரியத்தினை விளங்கிக் கொள்ளாதவர்களின் நிலைப்பாடாகவே நாம் கருதுகின்றோம் மிகக் கவனமாகவும் நிதானமாகவும் சிந்தித்து முடிவெடுத்த பின்பே எமது ஆதரவினை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க முன்வந்தோம்.

தற்போது கிழக்கிலே பேசப் படுகின்ற ஒரு விடயத்தினை கூற விரும்புகின்றேன் சஜித்திற்கு வாக்களித்தால் மாற்றினமே எம்மை ஆட்டிப்படைக்கும் இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போகின்றது என்கின்ற பொய்ப் பிரச்சாரத்தினை முன்னெடுக்கின்றனர் கருணா அம்மான். பிள்ளையான் போன்றவர்கள் வட கிழக்கினை துண்டாடுவதற்கு காரணமாக இருந்தவர்கள் கிழக்கிலே எமது இனத்தின் விகிதாசாரத்தினை குறைப்பதற்கு காரணமாக இருந்து விட்டு கிழக்கை காப்பாற்றப் போகின்றார்களாம் வேடிக்கையாக இருக்கின்றது.

 

ஆரையம்பதி தினகரன் நிருபர்

Wed, 11/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை