விமானியின் தவறுதலான எச்சரிக்கையால் பதற்றம்

நெதர்லந்து விமானம் ஒன்று கடத்தப்பட்டதாக விமானி ஒருவர் தவறுதலாக எச்சரிக்கையை எழுப்பியது ஷிப்போல் விமான நிலையத்தில் பீதியை ஏற்படுத்தியது.

விமான நிலையத்தில் பெரிய அளவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த விமானி செலுத்திய எயார் யுரோபா விமானத்தில் 27 பயணிகள் இருந்தனர். விமானம் மெட்ரிட் நகருக்குப் புறப்படவிருந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், சந்தேகத்திற்குரிய பொருளை கண்டு வெடிகுண்டாக கருதி விமானி தவறுதலாக அலாரம் அடித்து பீதியைக் கிளப்பி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் விமானத்தில் எந்த வெடிப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தச் சம்பவத்துக்கு நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. ஐரோப்பாவின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களில், ஷிப்போல் விமான நிலையமும் ஒன்று.

ஆண்டுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை அது கையாள்கிறது.

Fri, 11/08/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக