அமெரிக்க ஆயுதத்தைக் கொண்டு ரஷ்ய ஆயுதத்தை சோதித்த துருக்கி

ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ள அதி நவீன எஸ் – 400 வான் பாதுகாப்பு தளவாடத்தை தங்கள் நாட்டுத் தயாரிப்பான எஃப் –16 போர் விமானங்களைப் பயன்படுத்தி துருக்கி சோதித்துள்ளது குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சார் மைக்கேல் பொம்பியோ கூறியதாவது:

அமெரிக்கத் தயாரிப்பான எஃப் –16 விமானத்தைப் பயன்படுத்தி, ரஷ்யாவின் எஸ் –400 வான் பாதுகாப்பு ஏவுகணை தளவாடத்தை துருக்கி சோதித்துப் பார்ப்பது மிகவும் கவலைக்குரியது ஆகும்.

எனினும், இந்த விவகாரம் குறித்து துருக்கியுடன் தொடார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எஸ் –400 ஏவுகணைத் தளவாடத்தை துருக்கி முழுமையான பயன்பாட்டுக்கு இணைத்துக் கொள்ளக் கூடாது என்று நாங்கள் அந்த நாட்டிடம் தொடார்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த விவகாரத்தில் கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை ஏவுகணைகள் மூலம் தரையிலிருந்து வானில் இடைமறித்து தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் அதிநவீன எஸ –400 தளவாடங்களை, துருக்கி அண்மையில் வாங்கியது. நட்பு நாடான அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி இந்த ஆயுதக் கொள்முதலில் துருக்கி ஈடுபட்டது. அதற்குப் பதிலடியாக, ரேடார் கண்களுக்குப் புலப்படாத தனது அதிநவீன எஃப்–35 ரக போர் விமானங்களை துருக்கிக்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா ரத்து செய்தது.

Fri, 11/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை