சாஹிரா, புனித பெனடிக்ட் கல்லூரிகள் கூட்டு சம்பியன்

ருஸைக் பாரூக்

சாஹிரா வெட்ரான்ஸ் ஒழுங்கு செய்த ‘மாஸ்டர்ஸ் பிளாஸ்ட் 2019’ கால்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. . .

சாஹிரா கல்லூரி, றோயல் கல்லூரி, ஆனந்த கல்லூரி, ஹமீத் அல் ஹுசைனி கல்லூரி, புனித் பெனடிக்ட் கல்லூரி, டி மசெனோட் கல்லூரி, கம்பளை சாஹிரா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித ஹென்றி கல்லூரி அணிகள் போட்டியில் பங்கேற்றன.

இறுதிப் போட்டியில் போட்டியிட்ட சாஹிரா கல்லூரி மற்றும் புனித பெனடிக்ட் கல்லூரி மழையின் காரணமாக கூட்டு சாம்பியன் விருதைப் பிரதம அதிதி இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பிரதி தலைவர் ராமநாதன் புகலேந்திரனிடம் இருந்து இரு அணிகளின் தலைவர்கள் மொஹமட் ரூமி மற்றும் அதுல பெரேரா ஆகியோர் பெற்றனர்.

புனித பெனடிக்ட் கல்லூரி லலந்தா குமாரா சிறந்த கோல்காப்பாளராகவும் சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மொஹமட் ஹனிபா சிறந்த வீரர் விருதையும் கல்லூரி ஆளுநர் சபை தலைவர் பவுசுல் ஹமீதிடமிருந்து பெற்றனர் .

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை