ஜனாதிபதியானதும் திருடப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பேன்

நான் ஜனாதிபதியானால் மக்களிடமிருந்து திருடிய சொத்துக்களை மீளப்பெறுவதற்கு விசேட திட்டமொன்றை முன்னெடுப்பேன் என தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசானாயக்க தெரிவித்தார்.

பிரசார கூட்டமொன்றில் உரையாற்றி அவர் மேலும் கூறுகையில்,

தேவையான போது பணத்தை செலவிட கடந்த காலத்தில் தாமதிக்காது செயற்பட்டுள்ளனர். தரைவழித் தாக்குதல் மேற்கொள்வதற்காக பலமான வான் வழித்தாக்குதல் நடத்துமாறு இராணுவம் கோரிய போது உடனடியாக 4 மிக் விமானங்களை தருவித்தார்கள். தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ஆயுதம் வேண்டும் என்று கேட்ட போது பாக்கிஸ்தானில் இருந்து மல்டிபரல் கொண்டுவந்தார்கள். பணம் இல்லையென்று அவற்றை கொண்டுவராமல் இருக்கவில்லை.

எதிர்வரும் 16 ஆம் திகதி எனக்கு வாக்களித்து என்னை ஜனாதிபதியாக்கினால் மக்களிடமிருந்து திருடிய சொத்துக்களை மீள பெற்றுக்கொடுப்பது தொடர்பிலே எனது முதலாவது அறிவிப்பு இருக்கும். இதற்கா 2 மாத கால

அவகாசம் வழங்குவேன். ஜனவரி 17 ற்கு முன்னர் திருடிய சொத்துக்களை கையளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

தவறினால் அவற்றை அரசுடமையாக்க நடவடிக்கை எடுப்பேன்.

மக்களின் சொத்துக்களை சூறையாடியவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.

அவற்றை மீளப்பெற்றால் நாட்டை நிர்வகிக்க தேவையான பணம் கிடைத்துவிடும் என்றார்.(பா)

 

Fri, 11/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை