சிறுபான்மை கட்சிகள் எடுத்த முடிவே சஜித்தின் வெற்றிக்கு வழிகோளாக உள்ளது

சஜித் பிரேமதாசவை வெற்றி பெறச் செய்வதற்கு சிறுபான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து எடுத்துள்ள முடிவு அவரது வெற்றிக்கு வழிகோளாக அமைந்துள்ளதென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசாவை ஆதரித்து ஒலுவிலில் நேற்றுமுன்தினம் (10) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சஜித் பிரேமதாசவின் வெற்றியையடுத்த மலரப் போகும் புதிய ஆட்சியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முஸ்தீவுகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து அதற்கான வாக்குறுதிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

சஜித்தின் வெற்றிக்காக சிறுபான்மைக் கட்சிகள் முடிவு எடுத்துள்ள போதிலும் சில உரிதிக் கட்சிகளின் தலைவர்கள் இனவாதிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு வாக்குகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முகவர்களாக செயற்படுகின்றார்கள். இவர்களுக்கு எதிர்வரும் 16ம் திகதி சிறுபான்மை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கோட்டாபயவை வெற்றி பெறச் செய்வதற்கு ஹிஸ்புல்லாஹ் களமிறக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்கெதிராக செயற்பட்டு வருகின்றார். மஹிந்த ராஜபகக்ஷ தன்னுடைய ஆட்சிக்காலம் முடிவடைவதற்கு 02 வருடங்கள் இருக்கத்தக்கதாக ஜனாதிபதித் தேர்தலை வரவழைத்த போது அவருக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயமாக இருக்கின்றது என்ற பார்வை தான் எல்லோருக்கும் இருந்தது.

தனக்கு 02 வருடங்கள் இருக்கத்தக்க தேர்தலை அறிவிக்கின்றார் என்றால் வெல்லுகின்ற வாய்ப்பு இல்லாமல் செய்யமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

நாடு முழுவதும் அவருக்கு இருந்த செல்வாக்கு கூடி இருந்த மாதிரி பார்வை இருந்தது. சிங்கள மக்கள் மத்தியில் ஆனால் முஸ்லிம்களும் சிறுபான்மை சமூகங்களும் அவருடைய நடவடிக்கையில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அந்த ஆட்சிக் காலத்தில் பல அட்டூழியங்களை அனுபவித்து வந்தனர்.

அந்த நிலையில் தான் முஸ்லிம் காங்கிரஸ் தாமதமாக முடிவெடுத்தாலும் நாங்கள் எடுத்த முடிவு 2015ம ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பங்களியாகச் சேர்ந்து கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக இந்த ஆட்சியில் இருந்த காலத்தில் எமது செயல்பாடுகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் விதவிதமான உணர்வுகள் இருந்து கொண்டிருக்கின்றன.

சஜித் பி​ேரமதாச ஆட்சிப் பீடம் ஏறியதன் பிற்பாடு அம்பாறை மாவட்டத்திலுள்ள காணிப் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். அதேபோல் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து இப் பிரதேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் துறைமுக நுழைவாயிலிலுள்ள மணலை அகற்றுவதற்கு கடலுக்கு தரித்து நின்று அகற்றுவதற்கு கப்பல் ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஒலுவில் பிரதேசத்தில் அபகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுத் தருவதற்கும் ஆவண செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தினகரன், ஒலுவில் விசேட, பாலமுனை தினகரன் நிருபர்கள்

Tue, 11/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை