சப்ரகமுவ சிற்றூழியர்கள் மத்தியில் வாய்ப்புற்றுநோய் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள்

சப்ரகமுவ மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளில் சுத்திகரிப்பு ஊழியர்கள் மத்தியில் புற்று நோய் ஏற்படும் ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக சப்ரகமுவ மாகாண சுகாதார தி ணைக்கள தகவல்  குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி சிற்றூழியர்களுக்காக நடத்தப்பட்ட வைத்தியப் பரிசோதனை யொன்றின் போதே இத்தகவல் வெளியாகியுள்ளது."சப்ரகமுவ அழகானது" வேலைத்திட்டத்தின் கீழ்  மாகாணத்தின் இரத்தினபுரி மாநகர சபை பலாங்கொடை, கேகாலை, எம்பிலிப்பிட்டிய நகரசபைகள் உட்பட 25உள்ளூராட்சி மன்றங்களில் கடமையாற்றும் சிற்றூழியர்களுக்காக நடத்தப்பட்ட இலவச முழுமையான வைத்திய பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இவற்றில் கடமையாற்றும் 458ஊழியர்களில் 28ஊழியர்களுக்கு வாய்ப்புற்று நோய் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுவதாக வைத்திய பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட பல் வைத்திய அதிகாரி பிரசன்ன ரத்னாயக தகவல் தருகையில் வெற்றிலை சாப்பிடல் , புகைத்தல், மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினால்  சுத்திகரிப்பு ஊழியர்கள் மத்தியில் வாய்ப் புற்று நோய் அடையாளங்கள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Sat, 11/23/2019 - 10:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை