தென்கிழக்கு பல்கலைக் கழக இதழியல் மாணவர்களின் கள விஜயம்

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் இதழியல் டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொண்டு வரும் மாணவர்களின் உள்ளக கள விஜயமும் சீருடை அறிமுக நிகழ்வும் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இடம்பெற்றது. பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேரிசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

ஊடகத்துறை சார்ந்தவர்களின் திறமைகளை மேம்படுத்தும் வகையில் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தினால் போதிக்கப்பட்டு வரும் ஊடகவியல் டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொண்டு வரும் இரண்டாவது தொகுதி மாணவர்களுக்கான பிரத்தியேக சீருடையொன்று இதன்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஒலுவில் துறைமுக நிர்மாணத்தினைத் தொடர்ந்து ஒலுவில் பிரதேசத்தினை அண்டிய பகுதிகளில் பாரிய கடலரிப்பு நிகழ்ந்து வருகின்றது.

இக்கடலரிப்பின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான பெருந்தொகையான காணி கடலால் காவு கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ் இயற்கை அனர்த்தத்தினை ஊடகங்களின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டு செல்லும் வகையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்போது இதழியல் கற்கை நெறியினை மேற்கொண்டு வரும் மாணவர்கள் அப்பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்று அனர்த்த நிலைமையினைப் பார்வையிட்டனர்.

அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்

Thu, 11/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை