றபா சம்பியன் கிண்ணம்: ஒலுவில் லெவன் ஸ்டார் வசமானது

நிந்தவூர் அறபா விளையாட்டுக் கழகம் தனது 36ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய அணிக்கு 07 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென் பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி கடந்த (12) செவ்வாய்க்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

நிந்தவூர் ரியல் இம்ரான் மற்றும் ஒலுவில் லெவன் ஸ்டார் ஆகிய அணிகள் மோதிய இறுதி போட்டியில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்று சம்பியனானது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரியல் இம்ரான் அணி களத்தடுப்பு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய ஒலுவில் லெவன் ஸ்டார் அணி 5 ஓவர்கள் நிறைவடைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 49 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரியல் இம்ரான் அணி 5 பந்து வீச்சு ஓவர்கள் முடிவில் 29 ஓட்டங்களுக்கு 05விக்கட்டுக்களை இழந்து மேலதிக 21 ஓட்டங்களால் தோல்வியைத்தழுவியது. இதில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி சார்பாக ரஸ்மி 05 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

இப்போட்டியில் ஒலுவில் லெவன் ஸ்டார் அணி வெற்றி பெற்றதுடன் அவ்வணிக்கு 20,000 ரூபா பணப் பரிசும், வெற்றிக் கிண்ணமும் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்ட அணிக்கு 10,000 ரூபா பணப்பரிசும், கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இப்போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை ஒலுவில் லெவன் ஸ்டார் அணியின் ரஸ்மி பெற்றதோடு இச்சுற்றுப் போட்டியின் தொடர் ஆட்ட நாயகன் விருதை நிந்தவூர் ரியல் இம்ரான் அணியின் தலைவர் ஆரிப் பெற்றுக் கொண்டார்.

அரபா விளையாட்டுக்கு கழகத்தின் சுற்றுப்போட்டி குழு தலைவர் மௌலவி எம்.எம். கமர்டீன் தலைமையில் இடம்பெற்ற இறுதிப்போட்டிற்கு பிரதம அதிதியாக சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சர் பைசால் காசிம், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.எம்.எம். அன்சார், கே.எம் ஜாரிஸ், கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களான எம். ஜஸார், எம். ஜஸீர் உள்ளிட்ட முக்கிய அதிதிகள் கலந்து கொண்டனர்.

(நிந்தவூர் குறூப் நிருபர்)

Sat, 11/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை