அவுஸ்திரேலியாவில் தொடரும் காட்டுத்தீ

அவுஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவலாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குவின்ஸ்லாந்து ஆகிய மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வெயிலின் அளவு வரும் நாட்களில் 40 டிகிரி அளவு நீடிக்கும். இதனால் காட்டுத் தீ தொடர்ச்சியாக பரவும்.

தீயணைப்பு வீரர்கள் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகொப்டர்களில் நீர் பாய்ச்சப்பட்டு காட்டுத் தீயை அணைக்கும் பணி தீவிரமாக இடம்பெற்றுவருகிறது.

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ பரவுவது இயல்பானது என்றாலும் இந்த ஆண்டு உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதத்தை காட்டுத் தீ ஏற்படுத்தியுள்ளது. சுமார் 2 இலட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் காட்டுத் தீயில் நாசமாகியுள்ளன.

சுமார் 300க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயினால் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

அவுஸ்திரேலியாவில் அண்மைய ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீயாக இது பதிவாகியுள்ளது.

Mon, 11/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை