ஜெர்மனியில் கொலையாளியை தேடி 900 ஆண்களிடம் மரபணு சோதனை

23 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றில் துப்புத் தேடி மேற்கு ஜெர்மனி கிராமமான கிரவன்பிரொயிக்கில் நூற்றுக்கணக்கான ஆண்களிடம் மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11 வயது சிறுமியான கிளவுடியா ருப் 1996 ஆம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பில் ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரியுடன் பொருந்தச் செய்யும் முயற்சியாக பொலிஸார் குறைந்தது 900 ஆண்களிடம் மரபணு சோதனை மேற்கொள்ளும் பணியை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இந்த சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிளவுடியா1996 மே மாதம் வீதியில் சென்றுகொண்டிருந்தபோது கடத்தப்பட்ட நிலையில் இரண்டு நாட்களின் பின் பகுதி அளவு எரிந்த நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் முக்கிய துப்புகள் கிடைத்திருக்கும் நிலையில் இதனை விடுவிப்பதற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் ஒருவர் உள்ளுர் பத்திரிகை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

கொலை இடம்பெற்ற நேரத்தில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்த ஆண்கள் மரபணு சோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Mon, 11/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை