மாலி இராணுவ முகாமில் தாக்குதல்: 53 பேர் பலி

வட கிழக்கு மாலியில் இராணுவ முகாம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 53 படையினர் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

நைகர் நாட்டு எல்லையில் மனகா பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதல் மாலியில் படையினர் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்று என்று தொலைத்தொடர்பு அமைச்சர் யாயா சங்காரே குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசுக்கு குழு தமது அமக் செய்தி நிறுவனத்தின் ஊடே பொறுப்பேற்றபோதும் அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக குறிப்பிட்ட சங்காரோ, உடல்களை தேடும் மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார். அதிக சேதத்திற்கு உள்ளான இராணுவ முகாமுக்கு அருகில் இருந்து உயிர் தப்பிய பத்துப் பேர் காப்பற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் புர்கினா பாசோவுடனான எல்லைப் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் 40 மாலி இராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக மாலி அரசாங்கம் தகவல் வெளியிட்டது.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை