5 ஆண்டுகளில் முதல் தொடர் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 47 ஓட்டங்களால் வெற்றியீட்டிய மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2–0 என கைப்பற்றியது. இந்தியாவின் லக்னோவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை பெற்றது.

புூரன் 67 ஓட்டங்களும் லுௗவிஸ் 54 ஓட்டங்களும் எடுத்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல்ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்துக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி, 45.4 ஓவர்களில் 200 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நஜிபுல்லா சர்தான் மட்டும் அரை சதம் அடித்தார். அவர் 56 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரையும் வென்றது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கிந்திய தீவுகள் பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி இதுவாகும். அந்த அணி சார்பில் கார்ட்டெல், சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

போட்டி நடைபெறும் லக்னோவில், காற்று மாசு காரணமாகப் புகை மண்டலம்போல் மைதானம் காட்சியளித்தது. இதனால், மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் சிலர் வாயு முகமூடி அணிந்தபடி களத்தடுப்பில் ஈடுபட்டனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது மைதானத்தில் பூச்சிகள் படையெடுத்தன.

இது, வீரர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. காற்று மாசு காரணமாகப் போட்டியை பாதியில் நிறுத்த மேற்கிந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை நடுவர் ஏற்கவில்லை.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை