ஸ்பெயினில் 4 ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தல்

ஸ்பெயினில் கடந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது பொதுத் தேர்தலில் நேற்று மக்கள் வாக்களித்தனர்.

கடைசியாக கடந்த ஏப்ரலில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் சோசலிச தொழிலாளர் கட்சி அதிக இடங்களை பெற்றபோதும் அறுதிப் பெரும்பான்மையை பெறத் தவறியதோடு கூட்டணி அரசு ஒன்றை அமைப்பதிலும் தோல்வி அடைந்தது.

கடந்த 2015 தொடக்கம் ஸ்பெயினில் ஸ்திர அரசாங்கம் ஒன்றை அமைப்பதில் போராட்டத்தைச் சந்தித்து வருகிறது.

கட்டலான் பதற்றம் மற்றும் தீவிர வலதுசாரிக்களான வொக்ஸ் கட்சியின் எழுச்சிக்கு மத்தியிலேயே நேற்று தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஏப்ரல் தேர்தலுக்குப் பின் சோசலிச பிரதமர் பெட்ரோ சான்சஸ் இடதுசாரி பொடெமோஸ் கட்சியுடன் கூட்டணி அரசு ஒன்றுக்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் காலக் கெடுவான கடந்த செப்டெம்பர் வரை புதிய அரசு ஒன்றை அமைப்பதில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இறுதி பிரசார கூட்டத்தில் உரையாற்றிய சான்செஸ், “இரண்டு தேர்வுகள் தான் உள்ளன.

ஒன்று சோசலிசவாதிகளுக்கு வாக்களிக்க வேண்டும். அதன்மூலம் எம்மால் ஆட்சி அமைக்க முடியும் அல்லது முன்னேற்றம் கொண்ட அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதை தடுக்கும் வகையில் வேறு ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும்” என்றார். கட்டலான் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்து அந்த மாநிலத்தில் ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வரும் நிலையிலேயே இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

கட்டலான் பிரச்சியை இந்தத் தேர்தலில் அதிக செல்வாக்குச் செலுத்துவதோடு, வலதுசாரிக் கட்சிகள் பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை