புர்கினா பாசோ தாக்குதலில் 37 பேர் பலி: 60 பேர் காயம்

புர்கினா பாசோவில் சுரங்க நிறுவனம் ஒன்றின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டு மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

கண்டியின் பேர்ம் மெபோ என்ற நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றி வந்த ஐந்து பஸ் வண்டிகள் இடைமறித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிழக்கு நகரான புன்குவில் இருந்து 40 கிலோமீற்றர் தூரத்தில் கடந்த புதன்கிழமை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிதாரிகள் சூடு நடத்துவதற்கு முன்னர் காவலுக்குச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று குண்டு தாக்குதலுக்கு இலக்காகியது. கடந்த 15 மாதங்களில் செபபோ நிறுவனத்தில் ஊழியர்கள் மீது இடம்பெறும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

இஸ்லாமியவாத கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களால் மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினா பாசோ அண்மைய ஆண்டுகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான மாலி எல்லை பகுதிகளில் பரவி வரும் இந்த வன்முறைகளை தடுப்பதில் பாதுகாப்பு பிரிவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை