புத்தளம் லிவர்பூல் கழகம் 3 ஆவது முறையாகவும் 32 சுற்றுக்குள் பிரவேசம்

இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் வென்​ேடஜ் எப்.ஏ. கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் 64 அணிகளுக்கிடையிலான போட்டியில் வெற்றியீட்டிய புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் இலங்கையின் பிரபல 32 அணிகள் பங்கேற்கும் தொடருக்குள் பிரவேசித்துள்ளது.

மன்னார் விடத்தல்தீவு யுனைட்டட் கால்ப்பந்தாட்ட கழகத்தினை வெற்றி கொண்டதன் மூலமே புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் இந்த சுற்றுக்குள் பிரவேசித்துள்ளது. இந்த வெற்றியின் மூலமாக தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகம் 32 சுற்றுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பினை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

குறித்த இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை (24) மாலை பொலநறுவை தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

முதல் பாதியில் மன்னார் விடத்தல்தீவு யுனைட்டட் கால்ப்பந்தாட்ட கழகம் தொடரான இரு கோல்களை போட்டது. இதேவேளை புத்தளம் லிவர்பூல் கால்ப்பந்தாட்ட கழகமும் இரு கோல்களை போட இடைவேளையின் போது கோல் சமநிலையில் காணப்பட்டது.

இரண்டாவது பாதியில் போட்டி நிறைவுபெற 10 நிமிடங்கள் இருக்கும் தருவாயில் லிவர்பூல் மற்றுமொரு கோலினை போட நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் புத்தளம் லிவர்பூல் அணியினர் 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று அடுத்த 32 சுற்றுக்கான தகுதியினை பெற்றுள்ளனர். லிவர்பூல் அணிக்காக அதன் முன்வரிசை ஆட்டக்காரர்களான எம்.எம். முசக்கீர் 02 கோல்களையும், எம். ரஸ்வான் 01 கோலினையும் பெற்றனர். புத்தளம் லிவர்பூல் அணிக்கு இந்த போட்டிக்கான அனுசரணையினை ரமீஸ் ட்ரவல்ஸ் அண்ட் டுவர்ஸ் நிறுவனம் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 புத்தளம் தினகரன் நிருபர்

Thu, 11/28/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக