இந்தியா, பங்களாதேஷ் நாடுகளில் 2 மில்லியன் மக்கள் வெளியேற்றம்

புல்புல் சூறாவளி:

வங்காள விரிகுடா பகுதியை தாக்கிய புல்புல் சூறாவளி காரணமாக இந்தியா மற்றும் பங்களாதேஷில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்திய மேற்கு வங்காளத்தில் சாகர் தீவுக்கு அருகால் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவில் கரையை கடந்த இந்த சூறாவளி, அதிக மழை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

இந்த சூறாவளியால் ஏற்கனவே இருவர் உயிரிழந்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிராந்தியத்தின் பல துறைமுகங்கள் மற்றும் விமானநிலைங்களின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பரபரப்பான கொல்கத்தா விமானநிலையத்தின் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பங்களாதேஷின் இரு மிகப்பெரிய துறைமுகங்களான மொங்லா மற்றும் சிட்டகோங் துறைமுகங்கள் மூடப்பட்டிருப்பதோடு சிட்டகோங் விமானநிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அப்புறப்படுத்தப்பட்ட குடியிருப்பாளர்கள் 5,500க்கும் அதிகமான தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக பங்களாதேஷ் அனர்த்த முகாமை செயலாளர் ஷாஹ் கமால் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார். இதன்போது மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதோடு கரையோர பகுதிகளை இந்த சூறாவளி தாக்கும்போது மணிக்கு 150 கிலோமீற்றர் வேகத்தில் அலை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தாழ்வான கரையோர பகுதிகளைக் கொண்ட பங்களாதேஷ் அடிக்கடி சூறாவளி தாக்கத்திற்கு உள்ளானமோதும் அண்மைய ஆண்டுகளில் உயிர்ச் சேதங்களை குறைப்பதற்கு அந்த நாட்டினால் முடிந்துள்ளது.

முன்கூட்டிய சூறாவளி எச்சரிக்கை முறை மேம்படுத்தப்பட்டிருப்பதால் மக்களை வெளியேற்றுவதற்கு போதிய கால அவகாசம் கிடைத்துள்ளது. உள்ளுர் மக்களை பாதுகாப்பதற்காக அதிக சூறாவளி தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Mon, 11/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை