21 அடி உயரமான கஞ்சா செடி மாதம்பையில் கண்டுபிடிப்பு

ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர் கைது

மாதம்பையில் ஓய்வுநிலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது வீட்டின் முற்றத்தில் வளர்க்கப்பட்டிருந்த சுமார் 21 அடி உயரமான கஞ்சா செடியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அதேவேளை பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.

மாதம்பை தம்பகல்ல பிரதேசத்தில் (31) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி கஞ்சா செடி கைப்பற்றப்பட்டது. வெற்றிலை பந்தலுக்கு மத்தியிலேயே கஞ்சா செடி வளர்க்கப்பட்டிருந்ததாகவும் மாதம்பை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 21 அடி உயரமான கஞ்சா செடியை வெட்டியுள்ள பொலிஸார் அதனை காட்சிக்காக தற்போது மாதம்மை பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். விசித்திரமான உயரம் கொண்ட இந்த செடியை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் மாதம்பை பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர்.

அத்துடன் இதற்கு முன்னர் இவ்வாறானதொரு கஞ்சா செடியை தாங்கள் கண்டதில்லையென்றும் அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரையும் சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதோடு கஞ்சா செடியையும் பொலிஸார் கையளிக்கவுள்ளளனர்.

 

புத்தளம் குறூப் நிருபர்

Sat, 11/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை