20 கங்கருக்களை கொன்றவர் தண்டனையிலிருந்து தப்பினார்

லொரியால் கங்கருக்களை வேண்டுமென்றே மோதிக் கொன்ற அவுஸ்திரேலிய ஆடவர், விலங்கு வதைக் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் சிறைத்தண்டனையிலிருந்து தப்பினார்.

2 குட்டிகள் உள்ளிட்ட குறைந்தது 20 கங்கருக்கள், நாட்டின் தொலைதூரத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள வீதிகளில் கடந்த செப்டெம்பர் மாதம் மாண்டு கிடக்கக் காணப்பட்டன.

ஒரு மணி நேரம் நீடித்த அந்தக் கோரச் சம்பவத்தில் தாம் சம்பந்தப்பட்டிருந்ததை 20 வயது நேதன் சாங்கர், நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தச் சம்பவம் குறித்துப் பரவலான கண்டனங்கள் எழுந்தன. சாங்கர் கொடூரான முறையில் தற்காப்பில்லாத அதிகமான விலங்குகளுக்கு துன்பத்தை விளைவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

துன்புறுத்தல் அல்லது அடித்து ஒரு விலங்கிற்கு மரணம் விளைவித்ததற்காக அவர் 5 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையை எதிர்நோக்கினார். எனினும் முதல்முறை குற்றம் புரிந்த அவருக்கு 500 மணி நேரம் சமூக சேவையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.

சம்பவத்தின்போது வாகனத்தில் இருந்ததாக நம்பப்படும் இரண்டாவது நபர் குற்றச்சாட்டை மறுத்தார். அவர் மீதான வழக்கு ஜனவரி மாதம் விசாரணைக்கு வரும்.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை