பெண்களுக்கான 20க்கு 20 மாகாண கிரிக்கெட் போட்டி!

சர்வதேச தரம்வாய்ந்த சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை இனம் காணும் பொருட்டு நடாத்தப்படும் பிராந்தியங்களுக்கிடையிலான ரி/20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

கடந்த 25ம் திகதி தம்புள்ளை- கண்டி பிராந்தியங்களுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வர்த்- லுவிஸ் விதிகளின்படி 13 ஒட்டங்களால் கண்டி பிராந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. கொழும்பு, கண்டி, காலி மற்றும் தம்புள்ள பிராந்திய அணிகள் பங்குகொள்ளும் இச் சுற்றுப்போட்டிகள் யாவும் மாலையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. அன்று நடைபெறவிருந்த காலி-கொழும்பு பிராந்திய அணிகளுக்கிடையிலான மற்றொரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

கொழும்பு எஸ். எஸ். சி மைதானத்தில் நடைபெற்ற கண்டி- தம்புள்ள பிராந்தியங்களுக்கிடையிலான முதல் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சமரி அத்துபத்துவின் தலைமையிலான தம்புள்ள அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணி சார்பாக ஹங்சிமா கருணாரத்ன 42 ஓட்டங்களையும், பிரசாதினி வீரக்கொடி 41 ஓட்டங்களையும், சமரி அத்தபத்து 27 ஓட்டங்களையும் பெற்றனர். 133 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய ஹர்ஷிதா மாதவியின் தலைமையிலான கண்டி பிராந்திய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 120 ஓட்டங்கள் பெற்றிருந்த போது மழைகுறுக்கிட்டது. இதனால் டக்வர்த் – லுவிஸ் விதிப்படி 13 ஓட்டங்களால் கண்டி அணி வெற்றிபெற்று தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துகொண்டது.

கண்டி அணி சார்பாக தலைவி ஹர்சிகா மாதவி 49 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 66 ஓட்டங்களையும், சத்யா சங்தீபனி 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இத்தொடரின் முதல் போட்டிகள் கடந்த 24ம் திகதி நடைபெறவிருந்தாலும் அன்றைய சீரற்ற காலநிலை காரணமாக அன்று நடைபெறவிருந்த தம்புள்ள- – கொழும்பு அணிகளுக்கிடையிலான போட்டியும், கண்டி- – காலி அணிகளுக்கிடையிலான போட்டியும் 26ம் திகதி (நேற்று) நடைபெறுமென ஏற்பாட்டுக்குக்குழு தெரிவித்திருந்தது.

ஓட்ட விபரம்: தம்புள்ள அணி 20 ஓவர்களில் 132/4 விக்கெட் இழப்புக்கு (ஹங்சிமா கருணாரத்ன 42, பிரசாதினி வீரக்கொடி 41, சசிகலா சிறிவர்தன 27, கவீஷா தில்ஹானி 25/2, உமேஷா 09/1, ஜி. விஜேநாயக்க 26/1)

கண்டி அணி: 17 ஓவர்களில் 120/4 (ஹர்சிகா மாதவி 60, சத்யா சங்தீபனி 23, உமேஷா திமேஷானி 12, ஒரேஷா சியாமலி 22/1, சஷிகலா சிறிவர்தன 19/1, ஹன்சிம கருணாரத்ன 20/1).

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை