2ஆவது டி20: இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து பதிலடி

வெலிங்டனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து டி20 போட்டித் தொடரில் கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்கள் குவித்தது.

ஆரம்ப வீரர் மார்ட்டின் கப்டில் 28 பந்தில் 41 ஓட்டங்களும் ஜேம்ஸ் நீசம் 22 பந்தில் 42 ஓட்டங்களும் எடுத்தனர். ஜோர்டான் 3 விக்கெட்டும், சாம் குர்ரான் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

177 ஓட்டங்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணி 19.5 ஓவர்களில் 155 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் அதிகபட்சமாக 39 ஓட்டங்களும் ஜோர்டான் 19 பந்தில் 36 ஓட்டங்களும் எடுத்தனர். சான்ட்னர் 3 விக்கெட்டும், சவுத்தி, பெர்குசன், சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடர் 1–1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஆட்டம் வரும் 5ஆம் திகதி நெல்சனில் நடைபெறவுள்ளது.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை