கொல்கத்தாவில் அடுத்த மாதம் 19-ம் திகதி ஐபிஎல் வீரர்கள் ஏலம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஐபிஎல் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையினால் ஆண்டுதோறும் இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) ரி 20 தொடர் நடத்தப்படுகிறது. ஏப்ரல், மே மாதங்களில் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 8 அணிகளும் சில வீரர்களை வெளியேற்றும். சில வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்கும்.

மேலும், டிசம்பர் மாதம் நடைபெறும் ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள். அதன்படி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் திகதி நடைபெறும் என இந்த தொடருக்கான ஆட்சி மன்ற குழு முடிவு செய்தது.

‘‘ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் டிசம்பர் 19-ம் திகதி நடக்க இருக்கிறது. இந்த ஏலம் பாரம்பரியமான பெங்களூரில் இருந்து இந்த முறை கொல்கத்தாவுக்கு செல்கிறது’’ என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.

Thu, 11/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக