17 அரச நிறுவனங்கள் தொடர்பான கோப் அறிக்கை சபையில் சமர்ப்பிப்பு

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

17 அரச நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப் குழு)வின் அறிக்கை நேற்று குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம்,தென்கிழக்கு பல்கலைக்கழகம் அடங்கலான பல்கலைக்கழகங்கள் தொடர்பிலேயே கோப் குழு விசாரணைகளை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது.

முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட முறைகேடுகள் குறித்தும் அவர் தற்பொழுதும் பல்கலைக்கழகத்துடன்

தொடர்புபட்டு செயற்படுவது பற்றியும் கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது.

அவர் பல்கலைக்கழக விரிவுரையாளராக செயற்பட்டதாகவும் தற்பொழுது லக்சல நிறுவன தலைவராக உள்ளதாகவும் கோப் குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பயன்படுத்தக் கூடிய சொத்துக்களை பிரியோசமான முறையில் பயன்படுத்தாது குறித்து யாழ். பல்கலைக்கழககத்திற்கு கோப் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அவற்றை பயனுள்ளதாக பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது. பெட் பேர்டிசயர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காக விரிவுரையாளர் ஒருவருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தினால் 92 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியுள்ளது.ஒப்பந்தத்தை அவர் மீறியுள்ளதால் அவரிடம் இருந்து பணத்தை மீளப்பெற முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2016 இல்74 இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட 79 கம்பியூட்டர்கள் மற்றும் இரண்டு சேவர்கள் பயன்படுத்தப்படாதிருப்பது ஓய்வு பெற்ற 222 ஊழியர்களுக்கு இதுவரை ஒரு கோடி ஒரு இலட்சம் ரூபா பணம் வழங்கப்படாதுள்ளமை என்பன தொடர்பாகவும் கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Fri, 11/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை