நல்லாட்சியா, காட்டாட்சியா என 16 இல் மக்களே தீர்மானியுங்கள்

கல்முனை மாநகர  சபையின் பிரதி மேயர்  காத்தமுத்து கணேஸ்

தமிழ், முஸ்லிம் மக்கள் நமக்கு ஜனநாயகமுள்ள நல்லாட்சி வேண்டுமா? இருண்டயுகம் கொண்ட காட்டாச்சி வேண்டுமா? என்பதை மக்கள் நவம்பர் 16 இல் தீர்மானிக்க வேண்டும்.

கடந்தகால படிப்பினைகளை மறந்து நாம் இருண்ட யுகமான ராஜபக்ஷக்களின் பிடிக்குள் சிக்கிவிடக் கூடாது. ஜனநாயகப் பாதையில் தந்தையின் வழியில் பயணிக்கின்ற சஜித் பிேரமதாசவை அமோக வெற்றிபெறச் செய்து இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் கைகோர்க்கவேண்டும் என கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ் தெரிவித்தார்.

புதியஜனநாயக முன்னணியின் வேட்பாளர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்ைகயில்,

இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் சஜித்பிரமதாச மூவின மக்களின் பெரும்பான்மை வாக்குகளினால் ஜனாதிபதியாக முடிசூடப்போகின்றார்.

சஜித்தின் வெற்றியைக்கண்டு எதிர்த் தரப்பான ரஜபக்ஷகள் கலக்கத்தில் உள்ளனர். இனவாதிகளையும், மதவாதிகளையும் கொண்ட கூட்டணியை வைத்துக்கொண்டு கோட்டாபயவினால் இத்தேர்தலில் ஒருபோதும் வெற்றிபெறமுடியாது.

பிேரமதாசவின் வெற்றிக்கு முஸ்லிம் காங்கிரஸ்சின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் எந்தளவு பங்களிப்பு செய்து ஜனாதிபதி ஆக்கினாரோ, அதேபோன்று இம்முறை ரவூப் ஹக்கிம் அவரது மகன் சஜித் பி​ேரமதாசவை ஜனாதிபதியாக்கி அனைவரும் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க ஒன்றிணைய வேண்டும்.

இன்று தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் வெற்றிக்காக ஒன்றிணைந்துள்ளனர். இதனைக் கண்டு ராஜபக்ஷக்கள் நடுக்கத்தில் இனவாதத்தை கையில் எடுத்து உளறித்திரிகின்றனர்.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் ,முஸ்லிம் மக்கள் மீண்டும் ஒரு வரலாற்று தவறை இழைத்துவிடக்கூடாது. தவறானவர்களை தெரிவுசெய்து மீண்டும் வெள்ள வான் கலாசாரத்துக்கும், இருண்ட யுகத்துக்கும் சென்று விடக்கூடாது.

நவம்பர் 16 இல் நீங்கள் போடுகின்ற புள்ளடியே உங்கள் தலைவிதியை தீர்மானிக்கப்போகின்றது.

அன்னம் ஜனநாயகத்தின் சின்னம் என்பதை மனதில் வைத்து அனைவரும் வாக்களிக்கவேண்டும் என்றார்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Thu, 11/07/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக