16 பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

CID பணிப்பாளரும் இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 16பொலிஸ் மேலதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இதற்கமைய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம் விக்கிரமசிங்க கிழக்கு மாகாணத்திற்கும் பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.எஸ் பதிநாயக்க போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புக்குப் பொறுப்பாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் டபிள்யூ.எம்.எம் விக்கிரமசிங்க போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பிரதி பொலிஸ் மாஅதிபர் ஆர்.எம்.என்.ஜீ.ஓ பெரேரா சுற்றாடல் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பாகவும் பிரதி பொலிஸ் மாஅதிபர் ஈ.எம்.யூ.வி குணரத்ன களுத்துறை மாவட்டத்துக்கும் பிரதி பொலிஸ் மாஅதிபரான கே.என்.ஜே வெதசிங்க மாத்தறை மற்றும் தங்காலை மாவட்டங்களுக்கும் பிரதி பொலிஸ் மாஅதிபர் டி.ஜே பளிஹக்கார பாதுகாப்பு அமைச்சின் இணைப்பு அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.கே.ஜே. பீரிஸ் பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸாரின் குறைகேள் அதிகாரி பிரிவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி பொலிஸ் மாஅதிபர் எல்.பி.எஸ் சந்துன் கஹவத்த பதவிக்குரிய கடமைகளை சரிபார்க்கும் பிரிவுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ் அபேசேகர காலி மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மாஅதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ. திலகரட்ண குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஏ.ஆர்.என் ராஜபக்ஷ களனியிலிருந்து ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ். புஸ்பகுமார சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராகவும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பீ.டி.சிசிர நுகேகொடையிலிருந்து கொழும்பு தெற்கிற்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன்திலக்க கொழும்பு தெற்கிலிருந்து நலன்புரி பிரிவுக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.வி பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பல்வேறு பாரிய குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தென் மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபரின் உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 11/23/2019 - 09:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை