பிரான்ஸில் பாலம் உடைந்து 15 வயது சிறுமி உயிரிழப்பு

தென்மேற்கு பிரான்சில் ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்ததில் 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஒரு கார், ஒரு லொரி ஆகியவற்றோடு மேலும் ஒரு வாகனமும் தண்ணீரில் விழுந்தன. நான்கு பேர் மீட்கப்பட்டனர். பலரைக் காணவில்லை என அஞ்சப்படுகிறது.

டுலுௗசிலிருந்து வடக்கே 30 கிலோமீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 155 மீற்றர் நீளம், 6.5 மீற்றர் அகலப் பாலத்தின் மத்திய பகுதி வேகமாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றுநீரில் உடைந்து விழுந்தது.

காரின் முன்பகுதி தண்ணீருக்கு மேலே தென்பட்டது. சம்பவம் நேர்ந்த இடத்துக்கு மேலே ஹெலிகொப்டர்கள் சுற்றிக்கொண்டிருந்தன. ஆற்றுநீரில் விழுந்தவர்களை அவசரகால மீட்புப் பணியாளர்கள் படகுகளில் சென்று தேடினர்.

உயிரிழந்த சிறுமி தண்ணீரில் விழுந்த காரில் தாயுடன் பயணம் செய்தவர் என நம்பப்படுகிறது. பெண்ணை உயிருடன் மீட்க முடியவில்லை. தாயை அங்கிருந்தவர்கள் வெளியில் இழுத்துக் காப்பாற்றியுள்ளனர்.

Wed, 11/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை